Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஷ்ரத்தா கொலை வழக்கு; டேட்டிங் ஆப்ஸ் மூலம் பல பெண்களிடம் பேசிய அப்தாப்

    ஷ்ரத்தா கொலை வழக்கு; டேட்டிங் ஆப்ஸ் மூலம் பல பெண்களிடம் பேசிய அப்தாப்

    தில்லியில் இளம் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் அப்தாப்பின் தோழியிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன.

    மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண் தனது காதலனான அப்தாப் அமீன் பூனாவாலாவுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தில்லியில் லிவ்வின் வசித்து வந்தனர், திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா தொந்தரவு செய்ததால், காதலன் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி தில்லியின் பல பகுதிகளில் வீசியுள்ளார். 

    ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    அந்த வகையில், தற்போது விசாரணையில், அப்தாப்பின் மொபைல் போனில் டேட்டிங் ஆப்ஸ்  மூலமாக 15 முதல் 20 பெண்களுடன் தொடர்பு கொண்டு பேசி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டு 12 நாட்களுக்கு பிறகு மே 30 ஆம் தேதி, அப்தாப்பின் தோழியான பெண் மனநல மருத்துவரிடம் அவர் தொடர்பு கொண்டு பேசியதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். 

    இதன்பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அப்தாப்பின் நடத்தை சாதாரணமானதாகவும், அதீத அக்கறையுடன் இருந்ததாக தோன்றியதாகவும் தெரிவித்தார். மேலும், அப்தாப் பல வகையான வாசனை திரவியங்களை வைத்திருந்ததாகவும், தனக்கு வாசனை திரவியங்களை பரிசளித்ததாகவும் கூறினார். 

    மேலும் அக்டோபர் மாதத்தில் அப்தாப்பின் குடியிருப்புக்கு 2 முறை சென்றதாகவும், அப்போது ஒரு சமயம் விலை உயர்ந்த மோதிரத்தை அளித்ததாகவும். அது ஷ்ரத்தாவின் மோதிரம் என்று தனக்கு தெரியாது என்று தெரிவித்த மருத்துவர், ஷ்ரத்தா கொலை செய்யப்பதாகவோ அல்லது வீட்டில் மனித உடல் இருந்ததாகவோ எந்த தடயமும் தனக்கு தெரியவில்லை என்றும், அப்தாப் ஒருபோதும் பயந்ததாகவும் தெரியவில்லை என்றும் கூறினார். 

    தற்போது அந்த மோதிரம் அவரிடம் இருந்து மீட்கப்பட்டு, அவர் கூறியதை வாக்குமூலமாக காவல்துறையினர் பதிவு செய்தனர்.

    தொடரும் காதல் கொலைகள்! லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்த காதலியை கொடூரமாக கொன்ற காதலன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....