Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புபொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை; இளைஞர்களே முந்துங்கள்..

    பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை; இளைஞர்களே முந்துங்கள்..

    இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பொறியியல் படித்தவர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்துள்ள அறிவிப்பின்படி, மொத்தம் 68 காலியிடங்கள் உள்ளன. 

    இந்த 68 காலிப்பணியிடங்களும் துறை ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளின் கீழ் உள்ளது. 

    இந்தப் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக இளங்கலை பொறியியல் பட்டங்களை மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இந்த பணியிடங்களுக்கு 19.12.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.isro.gov.in/Careers.html என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக வரும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 250 ரூபாயும்,  SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Nov/Advt_Sci_EngrSC_EMC_BILINGUAL.pdf என்ற இணையதள பக்கத்தை அனுகலாம். 

    மு.க.ஸ்டாலினை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த்; காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....