Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பொதுமக்கள் மத்தியில் மியான்மர் ராணுவம் நடத்திய கொடூரம்; பள்ளி கேட்டில் தொங்கவிடப்பட்ட ஆசிரியரின் தலை

    பொதுமக்கள் மத்தியில் மியான்மர் ராணுவம் நடத்திய கொடூரம்; பள்ளி கேட்டில் தொங்கவிடப்பட்ட ஆசிரியரின் தலை

    மியான்மரில் ஆசிரியரின் தலையை துண்டித்த ராணுவத்தினர் அதை பள்ளி கேட்டில் தொங்கவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மியான்மர் நாட்டில் நடைபெற்ற ஆட்சியை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கியத தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். 

    மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது மிகக் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். 

    இதனிடையே, அந்நாட்டின் மிக்வே மாகாணம் தவுங் மையிட் கிராமத்தை சேர்ந்த 46 வயதுடைய பள்ளி ஆசிரியர் சா டுன் மொய் என்பவரை கைது செய்து அவரின் தலையை  அந்நாட்டு ராணுவத்தினர் துண்டித்தனர். பிறகு அங்கு ஓராண்டு காலமாக மூடப்பட்ட நிலையில் இருந்த ஒரு பள்ளியின் கேட்டில் தொங்க விட்டுள்ளனர். 

    அந்த ஆசிரியர் அந்நாட்டு ராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இதன்காரணமாகத் தான் அவரின் தலையை ராணுவத்தினர் பொதுமக்கள் முன்பு மிகக் கொடூரமாக துண்டித்துள்ளனர் என சொல்லப்படுகிறது. 

    இதையும் படிங்க: 66 குழந்தைகள் பலியான சம்பவம்; இந்திய இருமல் மருந்துகள்தான் காரணமா? தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....