Tuesday, March 19, 2024
மேலும்
  Homeஜோதிடம்இந்த வாரத்திற்கான ராசிபலன்கள் கடக ராசி  முதல் கன்னிராசி வரை 

  இந்த வாரத்திற்கான ராசிபலன்கள் கடக ராசி  முதல் கன்னிராசி வரை 

  மேஷம்  முதல் மீனம் வரை இந்த வாரத்திற்கான (11.2.2022 முதல் 18.2.2022 வரை) உங்கள் ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

  kadagam

  கடக ராசி 

  கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் புதன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு சிறு தடை ஏற்பட்டாலும், நீங்கள் விடாமல் முயன்றால் வெற்றி காண்பிர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சற்று கவனமாக இருக்க வேண்டும். சூரியன் 7,8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் காலகட்டம் என்பதால் வீண்விவாதங்களில் ஈடுப்பட வேண்டாம். உங்கள் குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றும் அடுத்தவர் குடும்பத்தில் நீங்கள் தலையிடுவதெல்லாம் கூடவே கூடாது.

  கொடுத்த வாக்கியத்தை அற்புதமாக நிறைவேற்றும் காலகட்டமாக இருப்பதால் உங்களுடைய  பொன்னான நேரத்தை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு ஏற்படக்கூடும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.

  பரிகாரம்:

  சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம். நவகிரகங்களில் சூரியனுக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது, வெல்லம் கோதுமை போன்றவற்றை தானம் செய்வது நல்லது.

   

  simmam

  சிம்ம ராசி

  சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல், சனி 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்றம், தொழிலில் ஏற்றம், படிப்பில் ஏற்றம் என அனைத்திலும் ஏற்றம் பெறக்கூடிய காலகட்டம் இது. குடும்ப விஷயங்களில் மட்டும் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி  வெற்றி உங்களை கைப்பற்றும்.  பூர்விக சொத்துகளால் ஓரளவுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒருசில உதவிகளை ஏற்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவு பெருகுவதால் தேவைகள் பூர்த்தியாவதுடன், பொன் பொருள் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலர் புதிய வீடு, வாகனங்களை வாங்க முயற்சிப்பீர்கள்.

  உடல் ஆரோக்கியத்திலும் பலம். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவார்கள். உயரதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

  பரிகாரம்:

  சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவதும், தினந்தோறும் விஷ்ணு சஹஸ்ர நாமங்களை படித்து வர சகல காரியங்களிலும்வெற்றி உண்டாகும். விநாயகரை வழிபட்டுவந்தால் தடைகள் தவிடு பொடியாகும்.

  kanni

   கன்னி ராசி 

  கன்னி ராசி நேயர்களே , உங்கள் ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதும்,3-ல் கேது 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். உத்யோகத் தடை, வியாபாரத் தடை, படிப்பு தடை என அனைத்து தடைகளும் நீக்கம் பெறும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு  வெற்றி பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.  மற்றவர்களை நம்பி பெரிய தொகைகள் கொடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து  வேறுபாடுகள்  மறையும். உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு குரு 6-ல் சஞ்சரிப்பதால்  ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் நல்ல வாய்ப்புகள் உங்கள் வீட்டை தேடி வரும். லாபங்களும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சம்பளத்துடன் கூடிய பணி உயர்வு ஏற்படும். திடீர் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

  பரிகாரம்:

  புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விஷ்ணுவை வழிபாடு செய்து வாருங்கள். தேவையற்ற மன சங்கடங்கள் நீங்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூட முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

   

  மேலும் மேஷம் முதல் மிதுனம் வரை படிக்க 

  மேலும் துலாம் முதல் தனுசு வரை படிக்க 

  மேலும் மகரம் முதல் மீனம் வரை படிக்க 

   

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....