Wednesday, May 17, 2023
மேலும்
  Homeஜோதிடம்இந்த வாரத்திற்கான ராசிபலன்கள் துலாம் முதல் தனுசு வரை 

  இந்த வாரத்திற்கான ராசிபலன்கள் துலாம் முதல் தனுசு வரை 

  மேஷம்  முதல் மீனம் வரை இந்த வாரத்திற்கான (11.2.2022 முதல் 18.2.2022 வரை) உங்கள் ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

  thulam

   

  துலாம் ராசி 

  துலாம் ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 5-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும். உங்களுக்கு இருக்கின்ற நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உங்கள் தேவைகள் அனைத்தும் இந்த வாரத்தில் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும்.  கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வராத கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

  குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டைகள் உருவாகலாம். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களை அடைய முடியும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்கள் இப்பொழுது குடும்பத்துடன் சேரக்கூடிய நிலைமை உருவாகும். சூரியன் 4 -ல் இருப்பதால் வீண் அலைச்சல் உண்டாகும். உடல் அசதி, கை கால் வீக்கம் ஏற்படும். 

  குரு பார்வையானது ஜென்ம ராசியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில், பொருளாதார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.  மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான எதிர்பார்த்த உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

  பரிகாரம் 

  சனிக்கிழமையில் சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களான எள் தீபம் ஏற்றுவது, கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது மிகவும் நல்லது.

  viruchigam

  விருச்சிக ராசி 

  விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சனி,சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்நிலை உருவாகும்.நல்ல வாய்ப்புகள் உங்களை  தேடி வரும். தாராள தன வரவால் பொருளாதார நிலை மேன்மை அடையும். மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

  தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.  வேலைப்பளு அதிகரிக்கும்.  உடன் பணி புரிபவர்கள் உரிய நேரத்தில் உதவி புரிவார்கள். பிப்ரவரி 11 மாலை முதல் பிப்ரவரி 14 அதிகாலை வரை  உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைப்பெறவிருப்பதால் எதிலும் நிதானதாய் கடைபிடிக்கவும்.

  பரிகாரம்

  குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டைக்கடலை மாலையிட்டு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை கிட்டும்.

  thanusu

  தனுசு ராசி  

  தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்மத்தில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை பெறுவதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதின் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவீர்கள். பொருளாதார நிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றாலும் ஜென்மராசியில் சுக்கிரன், 6-ல் ராகு, சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள் நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் இருப்பீர்கள். வண்டி வாகனங்களினால் விரயங்களை சந்திப்பீர்கள். 

  உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும்.  தொழில் வியாபாரத்தில் வேலையாட்களாலும், கூட்டாளிகளாலும் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் பொறுமையுடன் இருந்து, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது உத்தமம்.பிப்ரவரி 14, 15, 16 தேதிகளில் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைப்பெறவிருப்பதால் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.  இந்நாளில் பொருள் திருட்டு போகுமென்பதால் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

  பரிகாரம் 

  விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் தொல்லைகள் நீங்கும். செல்வ நிலை உயரும்.

  மேலும் 

   

  மேலும் மேஷம் முதல் மிதுனம் வரை படிக்க

  மேலும் கடகம் முதல் கன்னி வரை படிக்க 

  மேலும் மகரம் முதல் மீனம் வரை படிக்க 

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....