Tuesday, March 19, 2024
மேலும்
  Homeஜோதிடம்இந்த வாரத்திற்கான ராசிபலன்கள் மகரம் முதல் மீனம் வரை  

  இந்த வாரத்திற்கான ராசிபலன்கள் மகரம் முதல் மீனம் வரை  

  மேஷம்  முதல் மீனம் வரை இந்த வாரத்திற்கான (11.2.2022 முதல் 18.2.2022 வரை) உங்கள் ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

   

  magaram

  மகரம்  

  மகர ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் புதன், 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள்.  நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாக உங்களுடைய மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில்  ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் வரும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திட முடியும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகக்கூடும் என்பதால் சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்.  பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 18 இரவு வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால் வாக்கில் கவனம் தேவை.  முன்கோபத்தை குறைப்பது நல்லது.  அந்நியர் குடும்பத்தில் தலையிடுதல் கூடாது.

  பரிகாரம் 

  செவ்வாய்கிழமையில் முருகனுக்கு விரதமிருந்து வணங்கி வழிபட வேண்டும். சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

  kumbam

  கும்பம் 

  கும்ப ராசி நேயர்களே  உங்கள் ராசியில் 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, நெருங்கியவர்கள் உதவியால் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்களை தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.  குடும்பத்தில் நிலவிய சிறுசிறு பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  சூரியன்,சனி 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். எதிலும் சிக்கனம் கடைபிடிப்பது நல்லது.  பிள்ளைகள் வழியில் ஒரு சில அனுகூலங்களை அடையலாம். 

  தொழில் வியாபார ரீதியில் ஓரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் புதிய வாய்ப்புகள் உருவாகும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல்கள் உருவாகும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது.  

  பரிகாரம் 

  பிரதோஷ நாளில் சிவ பெருமானை தரிசிப்பதாலும், சிவ ஸ்லோகங்கள் படிப்பதாலும் இறைவனின் அருளால் சகல நன்மைகளும் அடையலாம். 

  meenam

  மீனம் 

   மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன், 11-ல் புதன், சனி, சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குரு 12-ல் சஞ்சரிப்பதால் வீண் செலவுகளை குறைப்பது நல்லது.  புத்திர வழியில் பூரிப்பும், பூர்விக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். 

  தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். 

  பரிகாரம் 

  வெள்ளிக்கிழமையில் மகா லட்சுமி தேவியை வண தாமரை மலர் கொண்டு வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

  மேலும் மேஷம் முதல் மிதுனம் வரை படிக்க

  மேலும் கடகம் முதல் கன்னி வரை படிக்க

  மேலும் துலாம் முதல் தனுசு வரை படிக்க 

   

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....