Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மீது மீண்டும் முட்டை வீசப்பட்ட சம்பவம்; ஒருவர் கைது

    மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மீது மீண்டும் முட்டை வீசப்பட்ட சம்பவம்; ஒருவர் கைது

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு தற்போது மன்னராக பதவியேற்று இருக்கும் மூன்றாம் சார்ல்ஸ் மீது மீண்டும் முட்டை வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு தற்போது மன்னராக பதவி ஏற்று இருக்கும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அந்நாட்டு மக்களை நேரடியாகசந்திக்கும் வகையில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

    வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லுட்டன் என்ற நகருக்கு சென்றார். அங்கு அவர் நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தார். 

    அப்போது அவர் மீது திடீரென ஒருவர் முட்டை வீசினார். இதையடுத்து மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் வேறொரு இடத்திற்கு பாதுக்காப்பாக அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு, தொடர்ந்து அவர் பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கி வந்தார். 

    இதைத்தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மீது முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    முன்னதாக கடந்த மாதம் இங்கிலாந்தின் யார்க் என்ற நகரத்திற்கு சென்ற மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமலா ஆகியோர் மீது முட்டைகள் வீசப்பட்டது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வங்கதேசம்.. தொடரை தக்கவைக்குமா இந்தியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....