Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வங்கதேசம்.. தொடரை தக்கவைக்குமா இந்தியா?

    ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வங்கதேசம்.. தொடரை தக்கவைக்குமா இந்தியா?

    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. 

    இந்தச் சுற்றுப்பயணத்தில் கடந்த 4-ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

    இந்திய அணியின் பேட்டிங் சொதப்பியதே, கடந்த போட்டியின் தோல்விக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணி தோற்கும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றிவிடும். 

    டக்காவில் ஶ்ரீ பங்ளா நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் தற்போது வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

    இந்திய அணி: 

    ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், குல்தீப் சென், உம்ரான் மாலிக், ரஜத் படிதார், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி , அக்சர் படேல்

    வங்கதேச அணி:

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ, யாசிர் அலி, ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், அபிஃப் ஹொசைன் துருபோ, எபடோட் ஹொசைன், அனாமுல் ஹக், லிட்டன் தாஸ்(கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் ( விக்கெட் கீப்பர்) நூர் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது மற்றும் தஸ்கின் அகமது.

    மினி வேன் மீது லாரி மோதி விபத்து; 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....