Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அதிமுக கட்சி இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் இருக்காது! கோவை செல்வராஜ் திட்டவட்டம்

    அதிமுக கட்சி இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் இருக்காது! கோவை செல்வராஜ் திட்டவட்டம்

    தமிழ்நாட்டில் அதிமுக கட்சி இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் இருக்காது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,

    14 வயதில் இருக்கும் போது நான் திமுகவிற்கு ஓட்டு கேட்டு இருக்கேன். தற்போது திமுகவின் தாய் கழகத்தில் இணைந்து உள்ளேன். அதிமுகவில் கடந்த 7 ஆண்டுகளாக பயணித்த நான் அவர்களுக்கு வக்காலத்து வாங்கியதுக்கு, நான் பொது மக்களிடையே மன்னிப்பு கேட்கிறேன். தற்போது தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. பொருளாதாரம், தொழில் வளர்ச்சி சிறப்பாகவும் சீரகவும் உள்ளது.

    தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உடன் பயணிப்பேன்.
    தமிழகத்தில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் திகழ்ந்து வருகிறது.
    முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி இருந்தபோது ஏழை எளிய விவசாயிகளுக்கு பத்தாயிரம் பேருக்கு தான் இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒன்றரை லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

    விரைவில் ஐந்தாயிரம் பேருடன் திமுகவை இணைவோம் என தெரிவித்தார். கோவை திமுக கோட்டையாக இருக்கும். 50 கிமீக்கு ஒரு ஆள் இருப்பவர்கள் எல்லாம் முதலமைச்சரைப்பற்றி பேசுகிறார்கள். காலில் விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு யோக்யதை கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி தெளிவான முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன்.

    ஜெயலலிதா இல்லாத காரணத்தால் எந்த பதவியையும் இவர்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வரும் வரையில், அமைச்சராக இருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்பட அமைச்சர்கள் வாயை மூடி இருந்தனர்.
    மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு ஏன் வைத்தியம் பார்க்கவில்லை என்றும் அறுவை சிகிச்சை செய்யவில்லை எனவும் இபிஎஸ், ஓபிஎஸ் கேட்கவில்லை. ஜெயலலிதாவிற்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தி, இதய அறுவை சிகிச்சை, செய்திருந்தால் அவர்கள் தற்போது வரை உயிரோடு இருந்திருப்பார். ஜெயலலிதாவின் மருத்துவத்திற்காக வெளிநாட்டுக்கும் கூட்டி செல்லவில்லை.

    இதையெல்லாம் பார்த்த பின்பு தான், இவர்கள் போன்ற சுயநலவாதிகளோடு இருக்க வேண்டாம் என்று கருதி தான், கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் பேசாமல் இருந்தேன் என தெரிவித்தார். அதிமுக கட்சி அல்ல அது ஒரு கம்பெனியாக செயல்பட்டு வருகிறது. இனிமே அதிமுக கட்சி இருக்காது. எனவே தொண்டர்கள் அனைவரும் எந்த ஒரு அச்சமும் இன்றி தாய்க் கழகமான திமுகவிற்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் அதிமுக கட்சி இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் இருக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    கொடநாடு வழக்கில் கைதிகள் எல்லாம் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், எனவே முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி யார் குற்றவாளிகளோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்; அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....