Saturday, March 16, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஅதிகம் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? கவனம் தேவை...விழித்துக்கொள்ளுங்கள்...!

    அதிகம் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? கவனம் தேவை…விழித்துக்கொள்ளுங்கள்…!

    அளவிற்கு அதிகமான தண்ணீர் உயிரை பறிக்கும் :

    நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆரோக்கியத்தை காக்கவும், தாகத்தை தணிக்கவும் நீர் மிக முக்கியமானதாக உள்ளது. என்னதான் நீர் மனிதனுக்கு இன்றி அமையாதது என்று சொன்னாலும்…

    அளவுக்கு மீறி தண்ணீர் குடுத்தால் அது உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    அதிக அளவு தண்ணீர் குடிப்பதால்… நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்
    ஒரு வேலை ஏற்கனவே பாதிக்கபட்டிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    சிறுநீர் நிறம்:

    நீங்கள் குடிக்கும் தண்ணீர் உங்கள் உடலுக்கு போதுமானதா? அல்லது தேவைக்கு அதிகமாக குடிக்கிறீர்களா என்பதை உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். இளம் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், தண்ணீரை போதுமான அளவில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

    அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உங்கள் உடலில் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறி. ஆனால் இதுவே வெள்ளை நிறத்தில் வெளியேறினால் நீங்கள் அளவுக்கு அதிகமான தண்ணீரை குடித்திருக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாம்.

    தண்ணீர் அளவு:

    ஒவ்வொருவரின் உடலின் அமைப்புக்கு ஏற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். அதனை தெரிந்து கொண்டு தேவையான குடிநீரை நாள்தோறும் அருந்த வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும்போது ரத்த நாளங்களில் அதிகளவு தண்ணீர் சேரும் அபாயம் உள்ளது. சோடியத்தின் அளவு குறைந்து உடலியல் மாற்றங்கள் ஏற்படும். சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படும்போது பிற சத்துகளின் அளவில் மாற்றத்தை உணரும் அதே வேளையில், உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    தென் சென்னை பகுதிகளில் 2 நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் | Water supply stoped two days in South Chennai areas – News18 Tamil

    அதிக தண்ணீர் பருகுதல்:

    நீங்கள் தேவைக்கு அதிகமாக தண்ணீரை பருகுகிறீர்கள் என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கூறிவிடலாம். .ஒரு சிலர் இரவு நேரத்தில் குறைந்தது ஏழு முறைக்கு மேல் சிறுநீர் செல்வார்கள் அதை வைத்தே
    அவர்கள் உடலில் தண்ணீர் அதிகம் சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கும் உடல் எடையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கைகள்,பாதங்கள், உதடு ஆகியவை வெளிர்ந்தும் வறண்டும் காணப்படும்.

    சோடியத்தின் அளவு:

    நம் உடலில் சோடியத்தின் அளவு குறையும் பட்சத்தில் அவை உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சோடியம் தான் நம் உடலிலிருக்கும் செல்களுக்கு தகவல்களை அனுப்புகிறது. செயல்பாடுகளை நினைவூட்டுகிறது. அதன் அளவு குறையும் பட்சத்தில் உடல் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும்.

    மேலும், அளவுக்கதிகமாக தண்ணீர் குடிக்கும் போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு அதீத வேலைப்பளு ஏற்பட்டு அவற்றின் செயல்பாடு குறையத் தொடங்கும். கிட்னியில் இருக்கக்கூடிய Glomeruli எனும் கேப்பிலரி பெட் சேதமடைந்திடும். மேலும், அதன் உச்சகட்டமாக, அதிக தண்ணீரை பருகும்போது மூளை வலுவிழந்து கோமா நிலைக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று கூறப்படுகிறது, ஆனால் 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உடலில் அதிக அளவு நீர் இருப்பதால், சிறுநீரகங்கள் செயலிழக்கும்.

    நின்றபடி தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தண்ணீரைப் பருகுவதற்கான சரியான வழி எப்போதும் உட்கார்ந்து கொண்டு தண்ணீரைக் குடிப்பது தான் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது அது உங்கள் வயிற்றில் உள்ள உணவுக் குழாயின் பாதையில் நேரடியாக பயணிக்கிறது, இதன் காரணமாக உங்கள் வயிற்று பகுதி சேதமடைய வாய்ப்பு உண்டாகிறது.

    Water Intake Pre, During and Post Workout - GOQii

    நின்றபடி தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் மூட்டுகளில் இருக்கும் வேதிப்பொருட்களின் சமநிலை மோசமடைகிறது, இதன் காரணமாக மூட்டு வலியின் பிரச்சனை தொடங்குகிறது. இதன் காரணமாக, உங்களுக்கு முதுகுவலி பிரச்சனையும் உண்டாகலாம்.

    அதிகளவு நீர் குடிப்பதால் இதய நோய்கள் வருமோ என்று சிலர் அஞ்சுகின்றனர். உண்மையில் அதிகப்படியான தண்ணீரை குடிப்பதால் நம் உடலில் உள்ள உணவை சரியாக ஜீரணிக்க முடியாது. இதன் காரணமாகவே மூச்சு திணறல் போன்ற பிரச்சனை வரலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ” என்பதை மனதில் கொண்டு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.

    மேலும் இதுபோன்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை அறிந்துகொள்ள தினவாசல் செய்திகளோடு இணைத்திருங்கள்.

    இதையும் படிங்க:பாட்டாளி மாடல்.. பயனளிக்கும் மாடல்! அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து பாமக அசத்தல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....