Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்உங்களின் இதயத்தைப் படிக்கப்போகும் ஆப்பிள் வாட்ச்!

    உங்களின் இதயத்தைப் படிக்கப்போகும் ஆப்பிள் வாட்ச்!

    மேயோ கிளினிக்கின் ஆராய்ச்சியாளர்கள், இதயத்தின் நலனை அளக்கும், அல்காரிதம் எனும் மென்பொருள் நிரலை உருவாக்கியுள்ளனர். மேயோ கிளினிக் அமெரிக்காவில் மிக பிரபலமானது. இந்த அலாகாரிதத்தை செயல்படுத்த மேயோ கிளினிக் மருத்துவர்கள் தேர்ந்தெடுத்த உபகரணம் எது தெரியுமா? ஆப்பிள் வாட்ச்.

    ஏற்கனவே, துாக்கம், ரத்த அழுத்தம் போன்ற பல உடல் நல அளவைகளை ஆப்பிள் வாட்ச் மிக துல்லியமாக கணிப்பதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர். அதனை பயன்படுத்தும் மக்களும் இதை ஒப்புக்கொள்கின்றனர். இந்த நிலையில் மேயோ கிளினிக்கும் ஆப்பிள் வாட்சையே தங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

    இதய நலனை அளக்கும் ஈ.சி.ஜி., கருவியில், மொத்தம் 12 மென் மின் முனைகளை, நோயாளியின் உடலில் ஒட்டவைத்து, மின் துடிப்பலைகளை அளப்பர். ஆனால், ஆப்பிள் வாட்சோ, மணிக்கட்டில் ஒரே ஒரு மின் முனையை வைத்து இதயத் துடிப்பு மின்னலையை பதிவு செய்கிறது. இதன் துல்லியத்தைக் கூட்டத்தான், மேயோ விஞ்ஞானிகள் ஒரு அல்காரிதத்தை எழுதியுள்ளனர்.

    இந்த இரண்டையும் கொண்ட ஒரு செயலியை, 1.25 லட்சம் பேரிடம் தந்து சோதித்தனர் மேயோ விஞ்ஞானிகள். அதன் முடிவில், வழக்கமான பெரிய ஈ.சி.ஜி., இயந்திரத்தைவிட, ஆப்பிள் வாட்சில் மேயோ அல்காரிதம் வாயிலாக எடுக்கப்பட்ட இதய அளவைகள் துல்லியமாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, இதய நோயாளிகளை கண்காணிக்க மருத்துவர்களுக்கு ஆப்பிள் வாட்ச் உதவும்.

    இந்த புதிய வகை கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றதா நீர்மின் திட்டங்கள்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....