Tuesday, May 16, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் இருக்கிறார்களா? சித்ராவின் பெற்றோர் சொல்வது என்ன?

  சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் இருக்கிறார்களா? சித்ராவின் பெற்றோர் சொல்வது என்ன?

  ‘சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை திசை திருப்ப, ஹேம்நாத் நாடகமாடுகிறார்’ என, சித்ராவின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.

  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் முல்லை கதாபாத்திரன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கொள்ளையடித்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சித்ராவின் மரணம் சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி வெள்ளித்திரை நட்சத்திரங்களிடமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு 2021-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி ஹேம்நாத் ஜாமினில் வெளியே வந்தார்.

  கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஹேம்நாத் புகார் அளித்தார். அதில், ‘சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். ‘மாபியா’ கும்பலிடம், எனக்கு தெரிந்த நபர்கள் பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு என்னையும் உடந்தையாக்க பார்க்கின்றனர். மறுத்தால் கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர்’ என, கூறியிருந்தார்.

  இந்நிலையில், சென்னை, திருவான்மியூரில் உள்ள வீட்டில், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:

  என் மகள் தைரியமான பெண். அவரை ஹேம்நாத் கோழையாக்கிவிட்டார். என் மகள் தற்கொலை செய்து கொண்டார் என, ஒரு நாளும் கூறமாட்டோம். அவரை ஹேம்நாத் கொன்றுவிட்டார். அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது.

  சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் இருப்பதாக கூறுகிறார். அப்படியானால் மனைவிக்கு தொல்லை கொடுக்கும் நபரை, இவர் என்ன செய்திருக்க வேண்டும். என் மகளின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம். வழக்கை திசை திருப்ப இப்போது நாடகமாடுகிறார். என் மகளுக்கு, புகை, மது குடிக்கும் பழக்கம் இல்லை. என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என, போராடி வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் புகார் அளித்தோம்; நடவடிக்கை இல்லை.

  ஆட்சி மாறியவுடன் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். முதல்வரை சந்திக்க முயற்சித்தோம். முதல்வர் தனிப்பிரிவில் மனு அளியுங்கள் என கூறிவிட்டனர். போலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட பல இடங்களில் புகார் அளித்தும், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. என் மகளைப் போல, இன்னொரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. போலீசார் தீர விசாரித்து, குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு சித்ராவின் பெற்றோர் தெரிவித்தனர்.

  வெளிவர இருக்கிறது, கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்; விலை இவ்வளவா?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....