Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்எப்படி இருக்கும் இந்த வாரம் - இதோ, மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்கள்!

    எப்படி இருக்கும் இந்த வாரம் – இதோ, மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்கள்!

    மேஷம்:

    இந்த வாரத்தின் தொடக்கம் சற்று மந்தமாக தான் இருக்கும். ஆனால், வாரத்தின் இறுதி உங்களுக்கு சாதகமாக அமையும்.

    சிறந்த திட்டங்கள் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். உங்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி நிலவும். இதனால் நீங்கள் மிகவும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் காணப்படுவீர்கள்.

    உங்கள் பணிகளை நீங்கள் மகிழ்ச்சியாக செய்வீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு கொண்டிருபீர்கள்.

    நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். கையில் இருக்கும் பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

    ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தேவையற்ற மன உளைச்சல் காரணமாக இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

    ரிஷபம்:

    ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகறளுக்கு தானம் செய்யுங்கள். இதனால் கடவுளின் ஆசியும் மகிழ்ச்சியும் கிட்டும். உங்கள் பயத்தை ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

    உங்கள் பணிகளை திறம்பட ஆற்ற உங்களுக்கு பொறுமை அவசியம். நீங்கள் யோசித்து சிறப்பாக செயல்பட வேண்டும். கூடுதல் செலவுகள் ஏற்படும் என்பதால் உங்களுக்கு கவலை ஏற்படும். இது தவிர்க்க முடியாதது.

    உங்கள் துணையுடன் பேசும்போது இணக்கம் குறைந்து காணப்படும். முதல் முறை பேசிக்கொள்வது போல பேசுவீர்கள். கண்களில் எரிச்சல் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவம் பார்த்துக் கொள்வது நல்லது.

    மிதுனம்:

    இன்றைய வாரம் சில போராட்டங்கள் இருக்கும் என்பதால் பொறுமையாக கையாள வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.

    உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது போராட்டங்களை சந்திப்பீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதில் பிரச்சினை காணப்படும்.

    நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். உங்கள் துணையுடன் கவனமாகப் பேசவும். உங்கள் துணையுடன் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கும்.

    சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்களிடம் தன்னபிக்கை மற்றும் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.

    கடகம்:

    நீங்கள் மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டும். புத்திசாலித்தனத்தை மேம்படுத்திக் கொள்வது நல்லது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

    உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பழகுவீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வை பராமரிக்க இயலும். உங்களுள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் திருப்தி காண்பீர்கள். உங்கள் பணிகள முடிப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

    பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

    சிம்மம்:

    உங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சியடைவீர்கள். வாக்குவாதம் மற்றும் வதந்திகளில் ஈடுபட வேண்டாம். கவனக் குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். பணிகளை திறமையாக ஆற்ற ஆன்மீக ஈடுபாடு சிறந்தது.

    பண வரவு குறைந்து காணப்படும். உங்கள் பணத்தை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் உறவில் நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் பராமரிக்க நீங்கள் எந்த விஷயத்தையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

    கன்னி:

    இலக்குகளை அடைவதற்கு போராட வேண்டும். இன்று எதிர்பாராத நன்மைகள் நேரலாம். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாக முடிப்பீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும்.

    நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்கள் மனதில் பொங்கும் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையிடம் இனிமையாகப் பேசுவீர்கள்.

    உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....