Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்எப்படி இருக்கும் இந்த வாரம் – இதோ, துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

    எப்படி இருக்கும் இந்த வாரம் – இதோ, துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

    துலாம்:

    நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். இதனால் உங்கள் உற்சாகம் அதிகமாகும். பணிகள் சுமூகமாக நடக்க கவனமுடன் பணியாற்ற வேண்டும். தொழில் சார்ந்த அணுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது.

    போதிய பணம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் துணையுடனான சந்தேகம் மோதலை ஏற்படுத்தும். நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த சந்தேகப் போக்கை தவிர்ப்பது நல்லது.

    ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செரிமானப் பிரச்சினைகள் மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

    விருச்சிகம்:

    தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். உங்கள் செயல்களை சிறந்த முறையில் ஆற்ற அமைதியான அணுகுமுறை தேவை.

    ஓய்வெடுக்க முடியாதபடி பணிகள் அதிகமாக இருக்கும். நிதிநிலைமையில் ஸ்திரத்தன்மை இருக்காது. வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்ப உறவினர்களிடம் நட்போடு நடந்து கொள்ளவேண்டும். இதனால் குடும்ப வட்டார உறவில் நல்லிணக்கம் காணப்படும்.

    பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் ஆரோக்கியத்தை தக்க வைக்கலாம்.

    தனுசு:

    அதிக பொறுப்புகளும் பதட்ட நிலையும் காணப்படும். இறை வழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் பணியில் உங்களுக்கு திருப்தி இருக்காது. பணியிடச் சூழலும் சிறப்பாக இருக்காது.

    நிதி நிலைமை சுமூகமாக இருக்காது. உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். நீங்கள் சிறிய விஷயங்களையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது.

    மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றாலும் பாதுகாப்பின்மை உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

    மகரம்:

    நீங்கள் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் இருப்பது நல்லது. பலன்களை எதிர்பாராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு உகந்ததாக இருக்காது. அதிகப் பணிகள் மற்றும் அசௌகரியங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

    பணியிடச் சூழல் உங்களுக்கு உகந்ததாக இருக்காது. அதிகப் பணிகள் மற்றும் அசௌகரியங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். சிறிய விஷயத்திற்கு வருத்தப் படுவது உறவை பாதிக்கும்.

    உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது. மகிழ்ச்சியாக இருப்பதும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்வதும் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

    கும்பம்:

    உங்கள் செயல்களில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வதன் மூலம் கடினமான சூழ்நிலையை சமாளிக்க இயலும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணியில் பலன்கள் உங்களுக்கு சாதமாக அமைய திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

    அதிகரிக்கும் பொறுப்புகளை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நீங்கள் கடன் வாங்க நேரலாம். உங்கள் துணையிடம் நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். அவரை நண்பர் போல நடத்துவதன் மூலம் ஆரோக்கியமான உறவு காணப்படும்.

    சளி சம்பந்தமான பிரச்சினை காணப்படும். குளிர்ச்சியான உணவு வகைகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

    மீனம்:

    நீங்கள் உங்கள் ஆற்றல் மூலம் வெற்றி காண்பீர்கள். உங்கள் மனது தெளிவாக இருக்கும். எனவே உங்கள் செயல்களை சிறப்பாக ஆற்றுவீர்கள். வேலை தொடர்பான பயணம் காணப்படும். இறுக்கமான பணிகள் மற்றும் பணிச்சுமைகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.

    பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக நீங்கள் அதிகமாக செலவு செய்ய நேரும். உங்கள் துணையுடன் அன்பாக மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்லுறவு வளரும்.

    உங்கள் ஆற்றலும் உறுதியும் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    எப்படி இருக்கும் இந்த வாரம் – இதோ, மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்கள்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....