Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மார்வெல் பாணியில் தயராகப்போகிறதா கே.ஜி.எஃப் 3? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்...

    மார்வெல் பாணியில் தயராகப்போகிறதா கே.ஜி.எஃப் 3? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்…

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாயை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும், ‘கேஜிஎஃப் 2’ வெற்றியால் பாலிவுட் கதிகலங்கிப் போயுள்ளது. பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி2’-க்கு அடுத்த ‘டான்’ நான் என ‘கேஜிஎஃப் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்து தென்னிந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

    தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு திரையரங்குகளில் ராக்கி பாயின் ராஜாங்கம் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. அந்தளவிற்கு, ‘அவன் கத்தி வீசின வேகத்துல புயலே உருவாகிடுச்சி சார்’ என பில்டப் காட்சிகளால் தியேட்டரையே பிளிறிடவைத்தார் பிரஷாந்த் நீல்.

    பில்டப் காட்சிகள் மட்டுமல்லாமல் இறுதிக்காட்சியில் ரசிகர்களை ஃபீல் செய்யவும் வைத்ததோடு மூன்றாம் பாகத்திற்கான லீடை ரவீனா டாண்டன் சொல்வதுபோல் காட்சிகள் அமைத்திருந்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் ‘கேஜிஎஃப் 3’க்கான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    இதனை தொடர்ந்து கே.ஜி.எஃப் 3 படத்தை மார்வெல் போன்று எடுக்க திட்டமிட்டு இருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

    இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஜய் கிர்கண்டுர் ” பிரசாந்த் நீல் தற்போது சலார் படத்தில் பிஸியாக இருக்கிறார். கிட்டத்தட்ட 35 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

    இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் முடிவடைந்து விடும் என்று நம்புகிறேன். அதனால் கே.ஜி.எஃப் 3 படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டு கே.ஜி .எஃப் 3 படம் வெளியாகும் என நம்புகிறோம்.

    யஷ்ஷூடன் வேறு ஏதாவது புது கதாநாயகர்கள் இணைவார்களா என கேட்கப்பட்ட போது, ” அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நாங்கள் மார்வெல் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம். வெவ்வேறு படத்தில் இருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டு வந்து டாக்டர் ஸ்ரேஞ்ச் போன்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறோம்.

    ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் அல்லது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வழியில் கே.ஜி.எஃப் 3-யும் நடக்கும். அப்படி அமையும் போதுதான் எங்களால் பெரிய அளவிலான பார்வையாளர்களை உள்ளே கொண்டுவர முடியும் என்று கூறியுள்ளார்.

    திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா; பின்னணியில் யார்? அமித் ஷாவிற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....