Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்இது தெரிந்தால் .... இனி வெங்காயத் தோலை தூக்கி போடமாட்டீங்க...

    இது தெரிந்தால் …. இனி வெங்காயத் தோலை தூக்கி போடமாட்டீங்க…

    வெங்காயம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம்.

    ஆனால், இனிமேல் அந்த வெங்காய தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள்? ஆம்! இதை வாசிங்க நீங்களே தெரிஞ்சுப்பீங்க..

    பல அடுக்குகளைக் கொண்டது தான் வெங்காயம். ஆய்வுகளில் வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால், இதனை அன்றாட உணவில் சேர்க்கும் போது உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

    வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமான அளவில் உள்ளன.

    வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல் மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சக்தி வாய்ந்த மயக்க மருந்து பண்புகள் உள்ளன மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யும்.

    வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. அதே போல் விட்டமின் A, C, E ஆகியவையும் நிறைந்துள்ளன.

    எனவே, இவற்றிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய வேறு வகை பயன்பாடுகள் தெரிந்தால் கண்டிப்பாக தோலை தூக்கி எறிய மாட்டோம். நீங்கள் தோலுரித்த பின் தனியாக ஒரு பாலித்தீன் பையில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வைட்டமின் ஏ நிறைந்த வெங்காயத்தோல் தேநீர் கண்களுக்கு நல்லது. இது சருமத்தின் அமைப்பையும் மென்மையையும் மேம்படுத்துகிறது. இதற்கு நீரை சுட வைக்கும்போது, அதனுடன் வெங்காயத்தோல், சர்க்கரை, டீத்தூள் சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால் இது உங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    வெங்காயத் தோல்களில் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

    வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இது தவிர, தலைமுடியைக் கழுவுவதற்கு முன், வெங்காயத் தோலை தண்ணீரில் போடவும். ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசினால், முடி கொட்டும் பிரச்சனையும் தீரும்.

    வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டைப் புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

    வெங்காயத்தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், பல வகையான நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

    கிளிக்கு எப்படி உணவளிக்கனும்னு தெரிஞ்சிக்க இதைப் படியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....