Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உருப்படாத திட்டங்களை கொண்டுவருவதுதான் திமுகவின் திராவிட மாடலா? - ஜெயக்குமார் விமர்சனம்!

    உருப்படாத திட்டங்களை கொண்டுவருவதுதான் திமுகவின் திராவிட மாடலா? – ஜெயக்குமார் விமர்சனம்!

    பகுத்தறிவு பேசும், பெரியார் பாதையில் வந்ததாக கூறிக்கொள்ளும் திமுக பவுர்ணமி தினத்தில் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும், நீட் தேர்வு இருக்காது, மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பல்வேறு உத்தரவாதங்களை திமுக அளித்தது. ஆனால் ஏதாவது ஒன்றை செய்துள்ளார்களா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த ஆட்சி முழுமையான நம்பிக்கை துரோகத்தை செய்துள்ளது. மக்கள் வெறுத்துபோய் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் இது பிரதிபலிக்கும். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு இம்மாதம் 24ம் தேதிதான் விண்ணப்பம் தொடங்குகிறது. பகுத்தறிவு கொள்கையில் வந்தவர்கள், தந்தை பெரியாரின் பாதையில் வந்தவர்கள் என கூறிக்கொள்ளும் திமுக பவுர்ணமி நாளில் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. ஓராண்டு திமுக ஆட்சியின் மதிப்பீடு ஆனது, நாங்கள் (அதிமுக) ஹீரோவாகவும், இவர்கள் (திமுக) ஜீரோவாகவும் இருக்கின்றனர்.

    அம்மா உணவகங்களை படிப்படியாக குறைத்து கருணாநிதி பெயரில் உணவகம் திறக்க முயற்சிக்கின்றனர். மகளிருக்கு இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என அனைத்தையும் முடித்துள்ளனர்.

    மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவோம். ஜெயலலிதா கொண்டு வந்த நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதுதான் திராவிட மாடல். உருப்படாத திட்டங்களை கொண்டு வருவதுதான் திமுகவின் திராவிட மாடல் என்று கூறியுள்ளார்.

    கிளிக்கு எப்படி உணவளிக்கனும்னு தெரிஞ்சிக்க இதைப் படியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....