Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் தீவிர சோதனையில் இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ உணவகங்கள்!

    மீண்டும் தீவிர சோதனையில் இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ உணவகங்கள்!

    தமிழகத்தில் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்த அனைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது.

    அதிக அளவில் கெட்டுபோன அசைவ உணவுகள் கண்டறியப்படுவதன் எதிரொலியால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுடனான மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தின்போது சென்னை மண்டல நியமன அலுவலர் மருத்துவ சதீஷ் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் தற்போது ஷவர்மா, மாம்பழம், இறைச்சிகள், சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கெட்டுப் போவதாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் கண்டறியப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஏற்கனவே, கேரள மாநிலத்தில் ஷவர்மா அசைவ உணவுகள் சாப்பிட்டாதல் உயிர்சேதம் கண்டறியப்பட்ட நிலையில் தமிழகத்தில் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்த அனைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

    மேலும், மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்கள் பெருமளவில் செயற்கை முறையில் பழுக்க வைக்க படக்கூடிய காட்சிகள் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது எனவே அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தீவிர சோதனை செய்வது அபராதம் விதிப்பது சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்பட பல பகுதியில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதுவரை 60 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடைகளில் இருந்து தரமற்ற 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதிகாரிகள் அந்த கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் என்று அபராதம் விதித்தனர். இதேபோல் நாசப்பட்டி வைத்திப் வண்டிப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரு போட்டி; இரு தீர்ப்பு – நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்தது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....