Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 'மைனர் டிகிரி' திட்டமா?

    பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ‘மைனர் டிகிரி’ திட்டமா?

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ‘மைனர் டிகிரி’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகம் தன் கீழ் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், பாடத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

    இந்த மாற்றங்களில் ஒன்றாக மைனர் டிகிரி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, ஃபின்டெக் மற்றும் பிளாக் செயின்(Fintech and block chain), பொது நிர்வாகம், தொழில்முனைவோர், டேட்டா அனலிஸ்ட், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய 5 பாடங்களையும் படித்து தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு கூடுதலாக மைனர் டிகிரி வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் டிகிரியை மூன்றாவது ஆண்டு முதல் மாணவர்கள் படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், ‘தமிழர் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ ஆகிய பாடங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயம் இந்தப் பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

    இதுமட்டும் அல்லாது, தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும் நிகழாண்டு அல்லது அடுத்த ஆண்டில் தமிழர் மரபு மற்றும் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை தங்களது பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

    குரூப் 5 ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் வெளியீடு – எப்போது விண்ணப்பிப்பது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....