Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஜெயிலர் படத்தின் பட்டியல் - சன் பிக்சர்ஸ் நிறுவனம்

    ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஜெயிலர் படத்தின் பட்டியல் – சன் பிக்சர்ஸ் நிறுவனம்

    ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான், ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதனை முன்னிட்டு ஜெயிலர் பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விநாயகன் – மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்து பலரின் மனதையும் கவர்ந்தவர். இவர் திமிரு திரைப்படத்தில் நடித்தவர். அத்திரைப்படத்தில் ‘ஏலே இசுக்கு’ என்று ஷ்ரியா ரெட்டி கதாப்பாத்திரம் கூப்பிடும்போது ஓடிவருவாரே அவர்தான் விநாயகன். 
    • வசந்த் ரவி – தரமணி, ராக்கி போன்ற டார்க் வகையறா திரைப்படங்களில் நடித்த இவர். ஜெயிலர் திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். 
    • யோகி பாபு – நெல்சன் திலீப்குமார் இதற்கு முன் இயக்கிய மூன்று திரைப்படங்களிலும், பெரிய அளவில் நகைச்சுவை செய்தவர் யோகிபாபு என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் இவர் மீண்டும் நெல்சன் திலீப்குமாருடன் இணைவது எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. 
    • ரம்யா கிருஷ்ணன் – படையப்பா திரைப்படத்தில் ‘நீலாம்பரி’-யாக நடித்து அனைவரையும் அசரவைத்தவர். தற்போது மீண்டும் ஒரு முறை ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....