Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் - சுகாதார அமைச்சகம் அறிவுரை

    குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் – சுகாதார அமைச்சகம் அறிவுரை

    குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் தற்போது நாட்டின் ஒரு சில பகுதிகளில் பரவி வரும் நிலையில், மத்திய அரசு இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த புதுவித நோய், கேரளாவில் கடந்த மே மாதம் 6-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 82-க்கு மேற்பட்டகுழந்தைகளுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும், இந்த காய்ச்சல் பொதுவாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் என்பதால், குழந்தைகள் மத்தியிலும் இந்நோய் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

    தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்ட குழந்தைகளை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை தனிமைபடுத்த வேணுமென மத்திய சுகாதார துறை கூறியுள்ளது. மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிவைத்தாலும் முடிவுகள் வருவதற்கு 2 முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

    எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ளும்படி அறிவுரைகள் வழங்கியுள்ளது மத்திய சுகாதார துறை.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular