Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைஅர்ஜூனாக அஜித் அசத்த 'வலிமை' எப்படி இருக்கிறது? - வலிமை திரைவிமர்சனம்!

    அர்ஜூனாக அஜித் அசத்த ‘வலிமை’ எப்படி இருக்கிறது? – வலிமை திரைவிமர்சனம்!

    செயின் பறிப்பு, போதைப் பொருள், கொலை, கடத்தல் போன்ற செயல்களை செய்யும் பைக்கர்ஸ் கேங்கையும், அதன் தலைவனையும் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் தன் ‘வலிமை’யால் ஒடுக்கினாரா என்பதே கதை.

    நடிகர்கள்: அஜித்குமார், கார்த்திகேயா, ஹூமா குரேஷியும்

    தயாரிப்பாளர்: போனி கபூர்

    இயக்குனர்: வினோத்

    இசை: யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான்.

    சென்னையில் பைக்கில் முகமூடி அணிந்த நபர்களால் தொடரப்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள் மற்றும் கடத்தல்களுடன் படம் தொடங்குகிறது. மதுரையில் அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கும் அஜித் தனது அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று வாழ்ந்து வருகிறார்.

    கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறன. பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம நபர்கள் அதை கடத்துகிறார்கள்.

    இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படும் அஜித் மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அப்போது, அந்த தற்கொலையின் பின்னணியில் போதை பொருட்கள், கொலை, கொள்ளை, கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார்.

    திரைக்கதையின் இறுதியில் பைக்கர்ஸ் கேங்கின் தலைவன் கார்த்திகேயாவை அசிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கும் அஜித் கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் அஜித். ஆக்சன், சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அண்ணன், தம்பி பாசத்தில் அனைவரையும் உருக வைத்திருக்கிறார் அஜித்.

    கார்த்திகேயா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஹுமா குரேஷி நாயகியாக நடித்து ஆக்சனில் மாஸ் காண்பித்திருக்கிறார். செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்குனர் வினோத் படத்தில் போதைப்பொருள், பைக் கொள்ளையர்களை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார். பைக் சாகசங்கள் அனைத்து மாஸ் காட்டி உள்ளது. படத்தில் விறுவிறுப்பான திருப்பங்கள் அமைத்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் இயக்குனர்.

    பாடல்:-

    வலிமை பாடல்களில் யுவன் சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அம்மா பாடல் அனைவரையும் உருக வைத்திருக்கிறது.

    வலிமை திரைப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....