Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்திருப்பி அடிப்போமே தவிர ஒருபோதும் சரணடைய மாட்டோம் - உக்ரைன் அதிபர்!

    திருப்பி அடிப்போமே தவிர ஒருபோதும் சரணடைய மாட்டோம் – உக்ரைன் அதிபர்!

    இரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான போர் சூழல் மேல்தான் உலகின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கிறது. வெறுமனே கவனம் மட்டும் போதுமா என்ற கேள்வி உலக மக்கள் தங்கள் நாடுகளிடம் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

    ஆம்! உலக மக்கள் எழுப்பும் கேள்வியானது சரி என்றே தோன்றும் அளவுக்கு உக்ரைன் மீதான இரஷ்யாவின் தாக்குதல்கள் இருந்து வருகின்றன. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, இப்போரில் இரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து சண்டையிட்டு வருகிறோம் என்று கூறியிருக்கிறார். 

    உக்ரைன் மீது இரஷ்யா இராணுவப்படை அனைத்து விதமான தாக்குதல்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, உக்ரைனின் தலைநகரான கிவியையும் மற்றும் உக்ரைனின் கிழக்கு பகுதிகளையும் இரஷ்யா திட்டமிட்டு தாக்கி வருகிறது. கிவியையும், கிழக்கு பகுதிகளையும் கைப்பற்ற இரஷ்யா முழுமுதலாக குதித்திருக்கிறது. 

    இரஷ்யா இராணுவப்படை தனது தாக்குதலைத் தொடங்க, உக்ரைன் இராணுவப்படையும் பதில் தாக்குதல் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. உக்ரைனின் பதில் தாக்குதலின் வீரியத்தை இரஷ்யா எதிர்ப்பார்த்திருக்காது என்பது பரவல் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், இரஷ்ய அதிபர் புதின் உக்ரைன இராணுவப்படைகளிடம் உங்களின் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுங்கள் என எச்சரித்துள்ளார். ஆனாலும் நாங்கள் திருப்பி அடிப்போம் என்றபடியே உக்ரைன் இராணுவம் சண்டை செய்து வருகிறது.

    இந்த எச்சரிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரஷ்ய அதிபர் எங்கள் வீரர்களை திரும்பிப்போக சொல்கிறார் என்றும் ஆனால், அப்படி நடக்காது எனவும் இரஷ்யாவிடம் நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம் எனவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் நிகழ்வு குறித்து உலக மக்களை கடும் அதிருப்தியில் உள்ளனர். கொரோனாவின் தாக்கத்தில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில்  போர் நிகழ்வுகளால் ஏற்படப்போகும் பொருளாதார வீக்கத்தை உலக நாடுகள் எப்படி சமாளிக்க போகிறது என்றும், கொரோனாவிற்கு பிறகும் மனித இனம் திருந்தாமல் போர் போன்ற செயல்களில் ஈடுபடுகிறதென்றும் உலக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....