Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தலிபான்கள் விதித்த புது உத்தரவு; அதிர்ச்சியில் மக்கள்!

    தலிபான்கள் விதித்த புது உத்தரவு; அதிர்ச்சியில் மக்கள்!

    ஆப்கானிஸ்தானில் பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றினர்.அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கும், அந்நாட்டுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். 

    ஆப்கானிஸ்தானில், பெண்கள் கல்லூரி செல்ல, வீட்டை விட்டு வெளியில் செல்ல தலிபான்கள் கட்டுப்பாடுகள் விதித்தனர். பெண்கள் கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதித்தனர். பெண்கள் நலத்துறை அமைச்சகத்தையும் தலிபான்கள் மாற்றிவிட்டனர். 

    இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர். “முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் உருவாக்கியதுதான் கருத்தடை சாதனங்கள். இவற்றை இனி பெண்கள் பயன் படுத்தக் கூடாது. மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்க கூடாது” என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த உத்தரவு தற்போது உலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

    ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் கட்டணம்; பயனர்கள் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....