Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா11 ஆம் வகுப்பு மாணவி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலன் கழுத்தை நெறித்து கொலை

    11 ஆம் வகுப்பு மாணவி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலன் கழுத்தை நெறித்து கொலை

    11 ஆம் வகுப்பு மாணவி திருமணம் செய்துக்கொள்ள மறுத்ததால், காதலன் கழுத்தை நெறித்து மாணவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர், பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமல் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக கமலுக்கும் அந்த மாணவிக்கும் இடையே வாக்குவாதம், சண்டை இருந்து வந்தது. இதில் அந்த மாணவி கமலை திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது. இதனிடையே கடந்த  ஜனவரி 17 ஆம் தேதி கமல் அந்த மாணவியை தான் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார். 

    அப்போது அந்த மாணவி தனக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் பிரிந்து விடலாம் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கமல், அந்த மாணவியை அவரது துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பிறகு மாணவியின் உடலை இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்று 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கால்வாயில் வீசிச் சென்றுள்ளார். 

    பிறகு அந்த ஊரை விட்டு அவர் தலைமறைவானார். இதையடுத்து தங்கள் மகள் காணவில்லை என மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கமலுடன் அந்தப்பெண் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. 

    இதனிடையே, மாணவியின் உடலை பிப்ரவரி 1 ஆம் தேதி கால்வாயில் இருந்து கண்டெடுத்தனர். இதையடுத்து, 8 பேர் கொண்ட தனிப்படை நடத்திய தேடுதலில் கமல் மற்றும் அவரது சகோதரர் ரவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

    ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் கட்டணம்; பயனர்கள் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....