Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்பல ஆண்டுகளாக போராடிக் கேட்ட கல்யாண மண்டபம்: மக்களின் கோரிக்கைக்கு விடிவுகாலம் பிறந்ததா?

    பல ஆண்டுகளாக போராடிக் கேட்ட கல்யாண மண்டபம்: மக்களின் கோரிக்கைக்கு விடிவுகாலம் பிறந்ததா?

    புதுச்சேரியில் ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கும் கல்யாண மண்டபம் அமைப்பதற்கு அனிபால் கென்னடி எம்எல்ஏ துரித முறையில் நடவடிக்கை.

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் மூன்றில் அறப்பணி அவ்வை தோட்டத்தில் 40 வருடம் முன்பு மேலே ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இருந்த மண்டபம் பழுதடைந்து இடிந்து விழுந்தது தற்போது அங்கு அரசமரம் வளர்ந்து அருகில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர், அவ்விடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்யாண மண்டபம் சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் வர இருக்கிறது, அதனை நகராட்சியை சட்டரீதியாக அணுகி துரிதமான முறையில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

    சட்டமன்ற உறுப்பினரின் இச்செயலால் நேதாஜி நகர் 3 மற்றும் 2, தமிழ் தாய் நகர், உடையார் தோட்டம், அவை நகர் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரின் சட்ட ரீதியான செயலுக்கு அந்த பகுதி மக்களை நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பல ஆண்டு காலமாக இதற்காக போராடிக் கொண்டு இருக்கிறோம் தாங்கள் வந்து தான் இதை செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி என்று கூறினார்கள்.

    மேலும் இதனால் பயன்பெற இருக்கும் ஏழை எளிய மக்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியில் தெரிவித்தனர். உடன் அதை சுற்றி உள்ள ஊர் பஞ்சாயத்தாரர்கள் நிர்வாகிகள், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, திக காளி, விசிக தோழர்கள், திமுக கழக சகோதரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் உடனிருந்தனர்.

    இதையும் படிங்கஅரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை மகா சமாதி அடைந்த தினம்: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....