Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...

    நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

    புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கழக வேட்பாளர்கள் எவ்வாறு பணி செய்ய வேண்டும் என்பது குறித்து அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், முன்னாள் மாநில செயலாலர், முன்னாள் எம்எல்ஏ நடராசன், மாநில மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன் EX. MC, திருநாவுக்கரசு. மாநில கழக துணை தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழக உடையார் உள்பட திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு மேம்பாட்டுப் பணி: அமைச்சர் சக்கரபாணி

    கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நமது கழகம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர்களை வெற்றி பெற வைக்க பாடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், வாக்காளர் பட்டியலில் அனைத்து தொகுதிகளிலும் போலி வாக்காளர்கள் நீக்குதல், விலாசம் மாற்றம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும், தேர்தல் துறையின் அறிவுறுத்தலின்படி பிஎல்ஓ 1, பிஎல்ஓ 2 ஆகிய பணிகளை மேற்கொள்ள கழகத்தின் சார்பில் ஒவ்வொரு பூத்திற்கும் முகவர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

    இப்பணிகளில் அற்பணிப்புள்ள திறமையான படித்த இளைஞர்களை நியமனம் செய்வது அவசியமான ஒன்றாகும் என பேசினார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 17 மாதத்திற்குள் எதிர்கொள்ள உள்ள சூழ்நிலையில் நாம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதனடிப்படையில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி புதிய வாக்காளர்கள் தேர்த்தல்,இது சம்பந்தமாக தேர்தல் துறையால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    அதிமுக சார்பில் அமையும் மெகா கூட்டணியில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் கழகம் போட்டியிடும் வாய்ப்பினை வழங்க மாண்புமிகு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய எடப்பாடியார் அவர்களை வலியுறுத்தி கழகம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை பெறுவோம் என பேசினார்.

    இதையும் படிங்ககூட்டுறவு வார விழாவையொட்டி ஒளிவு மறைவு இல்லாத சிறந்த நிர்வாகம் நடைபெற பயிற்சி முகாம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....