Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் நேர்ந்த விபரீதம் - சுட்டு கொல்லப்பட்ட தமிழக இளைஞர்...

    ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் நேர்ந்த விபரீதம் – சுட்டு கொல்லப்பட்ட தமிழக இளைஞர்…

    ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் ,தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் குவைத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .இந்த செயலை அதன் உரிமையாளரே செய்து மறைத்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

    அதன் விவரம் வருமாறு,

    திருவாரூர் மாவட்டத்தை சார்ந்தவர் திரு.முத்துக்குமரன். பி.பார்ம் பட்டதாரியான இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வாழ்ந்து வந்தார். கொரோனா தொற்று பாதிப்பினால் தனது வாழ்வாதாரத்தை இழந்த இவர் பின்பு காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அதிலும் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் பிள்ளைகளுக்கு படிப்பு செலவுக்கு கூட செலவு செய்ய போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டு, வெளிநாடு செல்ல முடிவு செய்தார்.

    ஐதராபாத் இல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை அனுகி ரூபாய் 1.5 லட்சம் செலவு செய்து குவைத் சென்றார். முதலில் அலுவலக பணியாளர் வேலை என்று தான் உறுதியளித்தார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த நிலை மாறியது. அதுவரை வெளிநாட்டில் இருந்து தனது மனைவியிடம் தொடர்பில் இருந்தவர் திடீரென

    அவரது மனைவியால் தொடர்புகொள்ள இயலவில்லை. திடீரென ஒருநாள் அவர் மனைவிக்கு அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்தது. அதாவது அவரது கணவர் இறந்துவிட்டார் என்பதுதான் அது.

    தனது கணவர் ஒட்டகம் மேய்க்க ஒப்புக்கொள்ளாததாலையே இப்படியொரு படு பாதகமான செயலை அதன் உரிமையாளர் செய்துள்ளதாகவும் ,அதனால் தன் கணவரை சுட்டு படுகொலை செய்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தனது கணவர் உடலை இந்தியா கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இச்சம்பவம் அந்த இளைஞரின் குடும்ப உறவுகளிடையேயும் ,அப்பகுதி மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    இனி தெரு நாய்களுக்கு சோறு வைத்தால் ‘உங்க கதி அதோகதிதான்’! – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....