Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமைதானத்தில் மட்டுமல்ல...சமூக ஊடகங்களிலும் முன்னிலை வகிக்கும் கோலி

    மைதானத்தில் மட்டுமல்ல…சமூக ஊடகங்களிலும் முன்னிலை வகிக்கும் கோலி

    ஒட்டுமொத்தமாக சமூக ஊடகங்களில் கோலியைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 31 கோடிக்கும் அதிகமாக உள்ளது. 

    விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்று கருத்தே இருக்காது. ஆனால், கடந்த சில வருடங்களாக விராட் கோலி ஃபார்ம் இல்லாமல் திணறி வந்தார். இந்நிலையில், ஆசியக் கோப்பைத்  தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். 

    விராட் கோலி சதம் அடித்ததில் இருந்து, சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இயல்பாகவே, விராட் கோலியை சமூக வலைதளங்களில் பலரும் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ட்விட்டரில் 5 கோடி பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். 

    இதையும் படிங்க: தொடர்ந்து 61 முறை வெற்றி! 106 வயதிலும் சாதனை படைத்த ரயில்வே ஊழியர் கண்ணையா

    மேலும், 33 வயதான விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி பின்தொடர்பவர்களுடன் உலகின் மூன்றாவது பிரபலமான விளையாட்டு வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார். 

    இந்த வரிசையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (47.6 கோடி) மற்றும் லியோனல் மெஸ்ஸி (35.6 கோடி) ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மேலும், கோலிக்கு 4.9 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனர். மொத்தத்தில் அனைத்து சமூக ஊடகங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 31 கோடிக்கும் அதிகமாக உள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....