நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளிவந்த படம், வாத்தி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் வெங்கட் அல்லூரி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் விமர்சனம் சமூகவலைதளம் மற்றும் இணையதளங்களில் கொட்டிக்கிடக்க, நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் அவர்கள், அவர் பாணியில் விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்தின்படி கீழ்காணும் விமர்சனம் அமைந்துள்ளது.
வாத்தி
கல்விதான் மதிப்ப தரும்னு சொல்ல வந்த வாத்தி
அத சரியா சொல்லாம போச்சு ரூட்ட மாத்தி
படத்துல பாட்டெல்லாம் ஒரு திருப்தி
பேக்-ரவுண்ட் ஸ்கோர்லதான் லைட்டா அதிருப்தி
கத வருது சும்மா சுத்தி சுத்தி
இருந்தாலும் தனுஷ் நடிப்பு ‘காட்டுத்தீ’
காதல் இருக்கு பாதி
நகைச்சுவைதான் மீதி
வசனம் எல்லாம் சக்தி
திரைக்கதைதான் இல்லையே சுத்தி
கல்விதான் பக்தி
அத சொன்ன விதம்தான் பத்தல ஆத்தி
தமிழ் படம்தான் வாத்தி
இருந்தும் தெலுங்கு வாசன முத்தி
எது எப்படினாலும் வாத்தி கமர்ஷியல் மாப்பி
பேசவந்ததை பேசியதா ‘வாத்தி’? தனுஷ் இதை நிறுத்துவாரா? – வாத்தி திரைவிமர்சனம்!