Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைபேசவந்ததை பேசியதா 'வாத்தி'? தனுஷ் இதை நிறுத்துவாரா? - வாத்தி திரைவிமர்சனம்!

    பேசவந்ததை பேசியதா ‘வாத்தி’? தனுஷ் இதை நிறுத்துவாரா? – வாத்தி திரைவிமர்சனம்!

    நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கி  அல்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான படம்தான், வாத்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், சம்யுக்தா, சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளனர்.

    கதை

    தமிழகத்தில் பிரபலமாக இயங்கி வருகிறது திருப்பதி தனியார் பள்ளி குழுமம். இப்பள்ளியின் உரிமையாளராகவும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவராகவும் சமுத்திரக்கனி (திருப்பதி) இருக்கிறார். இவரின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்தான், தனுஷ் (பாலா). 

    சமுத்திரக்கனியின் வியாபர உக்தியின் ஒரு அங்கமாக அவர் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குகிறார். அதன் அடிப்படையில் தனுஷ் ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள சோழவரம் என்ற கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு சமுத்திரக்கனியின் எண்ண ஒட்டங்கள் குறித்து ஏதும் அறியாத வெகுளியான ‘வாத்தி’ ஆக செல்கிறார். 

    சோழவரம் கிராமத்திற்கு சென்று அங்கு பள்ளியிறுதி வகுப்பை இடை நிறுத்திய 45 மாணவர்களுக்கு தனுஷ் சொல்லிக் கொடுக்கிறார். அங்கு மாணவர்கள் அனைவரும் அரசுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். இதனால், சமுத்திரக்கனி அதிர்ச்சியடைந்து, இப்படி போனால் நம் வியாபாரம் படுத்துவிடும் என எண்ணி தனுஷுக்கு பலவித இடையூறுகளை சமுத்திரக்கனி அளிக்கிறார். 

    அந்த தடைகளை தனுஷ் எவ்வாறு எதிர்கொள்கிறார்? சோழவரம் மாணவர்களுக்கு தனுஷ் ‘வாத்தி’ ஆக என்ன செய்கிறார்? அவர்கள் முன்னேற்றப் பாதைக்கு போகிறார்களா இல்லையா? என்பதே வாத்தியின் கதை. 

    விமர்சனம்

    கல்வி வியாபரமாக உருவெடுக்கும் புள்ளியில் ஆரம்பிக்கும் கதை, அதன் போக்கில் கல்வியின் முக்கியத்துவம், சாதிய வேறுபாடுகள், சின்னதா ஒரு காதல், கொஞ்சம் சண்டை என வாத்தி நீண்டு இறுதியில் சுபம் போடப்பட்டது. கல்வியும் வியாபரமும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. வாத்தி அவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்டிருக்கிறதா என்றால், இல்லை. கதையிலும், திரைக்கதையிலும் எந்தவித புதுமையும் இல்லாத ஒன்றுதான் வாத்தி. சில காட்சியமைப்புகள் ஆரவாரத்தை கூட்டியும், சில காட்சியமைப்புகள் ‘போதும்டா சாமி’ என்ற தோரணையையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், படமாக வாத்தி விறுவிறுவென நகர்ந்துவிடுகிறது. 

    தனுஷ் எது தேவையோ அதை தனது நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார். இருப்பினும் சில இடங்களில் நடிகர் ரஜனிகாந்தின் சிறுசிறு அசைவுகள் தனுஷிடம் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு கூட்டிவருவேன் என்ற இடத்தில் தனுஷ் வசனம் பேசும்போது அதில் ரஜினிகாந்தின் சாயல் அதிகமாகவே வெளிப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் பாடல்கள் மூலம் வாத்திக்கு தந்த ஆதரவை, பின்னணி இசையில் தரவில்லை என்பதுபோல் தோன்றுகிறது. 

    என்னதான் கதை தமிழகம்- ஆந்திர எல்லையில் நடப்பதுப் போல சித்தரிக்கப்பட்டாலும், வாத்தியில் தெலுங்கு பட வாசனைதான் அதிகம் வெளிப்படுகிறது. குறிப்பாக லிப்-சிங்க் பல இடங்களில் சிங்க் ஆகாமல் போனதை தெள்ளத்தெளிவாகவே காணமுடிகிறது. நகைச்சுவை காட்சிகள் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும், குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் சிரிப்பலைகளை திரையரங்குகளில் எழவைக்கிறது. தனுஷ் மற்றும் சம்யுக்தா காட்சிகளில் காதலை காட்டிலும் நகைச்சுவை வொர்க்-அவுட் ஆனது. நாயகியாக சம்யுக்தா தனக்கு கொடுக்கப்பட்டதை அலட்டல் இல்லாமல் செய்திருக்கிறார். இனி வரும் படங்களில் அந்த லிப்-சிங்கை தேற்றிக்கொண்டால் நன்றாகவே அவர் மிளிர வாய்ப்பிருக்கிறது. சமுத்திரக்கனி நடிப்பு நடிப்பாக மட்டுமே வாத்தியில் உள்ளது. 

    கதையில் இருக்கும் கல்வியும்-வியாபரமும் குறித்த ஆழம், திரைக்கதையில் தேடுபொருளாக மாறிவிடுகிறது. மேம்போக்கான புரிதல்கள் கல்வியின் திட்டமிடல் அளவில் இப்படத்தில் எதிரொலிப்பதை தவிர்த்திருக்கலாம். வாத்தி படத்தில் தனுஷின் சண்டை காட்சிகளுக்கான மாஸை காட்டிலும், படத்தில் வரும் திரையரங்கு காட்சிகள் திரையரங்குகளில் மாஸை கூட்டியது என்பது குறிப்பிடப்படவேண்டியது. 

    ரசிகர்களை ஏமாற்றிய அனிருத், விக்னேஷ் சிவன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....