Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமளமளவென விக்கெட்டை இழந்த இந்தியா; முன்னிலையில் ஆஸ்திரேலியா

    மளமளவென விக்கெட்டை இழந்த இந்தியா; முன்னிலையில் ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – உஸ்மான் கவாஜா ஜோடி களமிறங்கினர். 

    கடந்த ஆட்டத்தில் சொதப்பிய டேவிட் வார்னர் இந்த ஆட்டத்திலும் 15 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த மார்னஸ் லாபுஷாக்னே 18 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் பூஜ்ஜிய ரன்னிலும் அஸ்வினின் சுழலில் வெளியேறினர். பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்னில் அவுட் ஆனார்.

    ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு பக்கம் உஸ்மான் கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் 81 ரன்கள் அவர் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் தனது விக்கட்டை பறிகொடுத்தார். 

    பிறகு வந்த அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்கமால் பெவிலியனுக்கு திரும்ப, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் கேப்டன் பாட் கம்மின்சுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி அணியின் விக்கெட் சரிவை மீட்டெடுத்தது. கம்மின்ஸ் 33 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த வீரர்களான டோட் மர்பி (0), நாதன் லியோன் (10), மேத்யூ குஹ்னேமன் (6) என சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். 

    மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால், ராகுல் 17 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ரோஹித் 32 ரன்களில் வெளியேறினார். டெஸ்ட்டில் 100-ஆவது ஆட்டத்தை கண்ட புஜாரா டக் அவுட் ஆனார். விராட் கோலி 44 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேறினார். 

    இந்திய அணி சரிந்துக்கொண்டிருக்க அக்சர் படேல், அஸ்வின் கூட்டணி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டது. அக்சர் படேல் 74 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அஸ்வின் 37 ரன்களுக்கு பெவிலியடுக்கு நடை கட்டினார். மொத்தத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவஜா 6 ரன்களில் வெளியேற, தற்போது ட்ராவிஸ் ஹெட்  39 ரன்களுடனும், மார்னஸ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 61 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலிய 62 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 

    ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு; மார்ச் 31-ஆம் தேதி தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....