Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு; மார்ச் 31-ஆம் தேதி தொடக்கம்!

    ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு; மார்ச் 31-ஆம் தேதி தொடக்கம்!

    2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 31-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. 

    மார்ச் 31-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது.  ஐபிஎல் 2023 தொடரில் 70 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் 18 போட்டிகள் டபுள் ஹெட்டர்களாக உள்ளது. மொத்தம் பத்து அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. 

    இம்முறை ஐபிஎல் போட்டிகள் பழைய முறைப்படி சொந்த மைதானத்தில் 7 போட்டிகளும், பிற மைதானங்களில் 7 போட்டிகளும் விளையாடுகின்றன. மொத்தம் 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. 

    குரூப் 1: மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ 

    குரூப் 2: சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் 

    சென்னை அன்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள் – காவல்துறையில் வழக்குப்பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....