Tuesday, March 26, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா14 நாட்களில் உயிரிழந்த குழந்தை; 120 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்திலேயே தூக்கிச் சென்ற அவலம்

    14 நாட்களில் உயிரிழந்த குழந்தை; 120 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்திலேயே தூக்கிச் சென்ற அவலம்

    விசாகப்பட்டினத்தில் பிறந்து 14 நாட்களிலேயே உயிரிழந்த குழந்தையின் உடலை பெற்றோர் 120 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கிங் ஜார்ஜ் அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆம் தேதி மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பிறந்தது முதலே சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சனைகளின் காரணமாக அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில், நேற்று காலை அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தையை அதன் பெற்றோர் விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். இவர்கள் பாடேறு அருகே சென்றுகொண்டிருந்தபோது அங்கு சென்ற அவசர ஊர்தி குழந்தையின் உடலை ஏற்றிக்கொண்டு குமுது கிராமத்திற்கு சென்றது. 

    குழந்தையின் உடலை எடுத்து செல்ல அவசர ஊர்தி கேட்டதாகவும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இந்தச் சம்பவம் குறித்து மாநில அரசின் செயல்படாத தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கையை அளிக்க வேண்டுமென விசாகப்பட்டினம் மாவட்ட ஆந்திர முதல் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார். 

    ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல அவசர ஊர்தி ஏற்பாடு செய்து தர இருந்ததாகவும், இருப்பினும் அதற்குள் யாரிடமும் சொல்லாமல் குழந்தை உடலுடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

    மேலும், இதுகுறித்து பாடேறு பகுதி மலைவாழ் மக்கள் ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர்கள் ஏற்பாடு செய்த அவரச ஊர்தியில் குழந்தையின் உடலாய் எடுத்து சென்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

    கேதார்நாத் கோயில் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....