Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்5ஜி அதிவேக இணையதள சேவை; தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டம் அறிவிப்பு

    5ஜி அதிவேக இணையதள சேவை; தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டம் அறிவிப்பு

    இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் புதன்கிழமை சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அக்டோபர் 1 ஆம் தேதி தில்லி பிரகதி மைதானத்தில் மொபைல் மாநாட்டில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    5ஜி நெட்வொர்க் சேவை முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, புனே, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஜாம்நகர், அகமதாபாத் ஆகிய 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், ஆப்பிள், சாம்சங் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் 5ஜி-ஐ ஆதரிக்கும் மென்பொருள் இல்லை. 

    ஏர்டெல் நிறுவனம் தனது இணையதள கணக்கில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘5ஜி தொழில்நுட்பத்திற்கான மென்பொருளை எந்த வகை ஐபோன்களுக்கும் ஆப்பிள் நிறுவனம் இன்னும் புதுப்பிக்கவில்லை’ என தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவை கதிகலங்க வைத்த இந்திய பந்துவீச்சாளர்கள்…குல்தீப் அபாரம்!

    இதைத்தொடர்ந்து, இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் புதன்கிழமை ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங், விவோ மற்றும் சியோமி மற்றும் உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மேலும் இதில், 5ஜி அதிவேக இணையதள சேவையை மொபைல் போன்களில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எண்ணப்படுகிறது. 

    குறிப்பிட்ட 5ஜி தொழில்நுட்பம் மொபைல் போன்களில் வழங்குவதற்கான மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் வெளியிடுவதற்கு கால அவகாசம் எடுக்கும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....