Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: நாம் செய்ய வேண்டியது என்ன?

    சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: நாம் செய்ய வேண்டியது என்ன?

    ஒரு பெண் குழந்தை மகிழ்ச்சியாக வாழ இந்த உலகம் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாற வேண்டும் என்பதே இங்கு ஒவ்வொரு தனி நபரின் கனவாக இருந்து வருகிறது .

    சர்வதேச பெண் குழந்தை தினத்தில்,பெண் பாலினத்தை உள்ளடக்கிய மற்றும் சமத்துவம் கொண்ட சமூகத்தை நோக்கி ஒன்றிணைய ,இந்தியாவை பெண்களுக்கு பாதுகாப்பான,அதிகாரம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த இடமாக மாற்ற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

    சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் தவறான பிற்போக்கு எண்ணங்களை அகற்றி, ஆரோக்கியமான சமூக மாற்றத்தை உருவாக்கவே இதுபோன்ற விழிப்புணர்வு தினங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

    பெண் குழந்தைகளை கவுரவித்து ,ஊக்கப்படுத்துவதற்காகவே சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபையால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான உரிமையை நிலைநாட்டவுமே இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளைக் கண்டால் தானும் ஒரு குழந்தையாக மாறி விடும் ஒவ்வொருவரும் , வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும் .

    இதையும் படிங்க:5ஜி அதிவேக இணையதள சேவை; தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டம் அறிவிப்பு

    இதை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு ,பெண் குழந்தை பாதுகாப்பிற்காகவும் ,அவர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டும் பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது .

    அதன் ஒரு பகுதியாக சர்வதேச பெண் குழந்தை தினமான இன்று மூன்று பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு திறக்கலாம்..அதாவது முதல் பிரசவத்தின்போது இரட்டைப் பெண் குழந்தைகளும், இரண்டாவது பிரசவத்தின்போது மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தால், மூன்றாவது பெண் குழந்தைக்கு சுகன்யா சம்ரித்தி கணக்கு தொடங்கலாம்.

    பெண் சிசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த காலங்கள் எல்லாம் கடந்து , நாகரீக வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இந்த காலகட்டங்களிலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலைதான் நிலவி வருகிறது .இதை மாற்றவே ,ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளும் மதிக்கப்பட ,அவர்களுக்கான சுதந்திரத்தை பெற இந்த நாளில் உறுதியேற்போம் .

    இந்த உலகம் ஒரு பெண் குழந்தையின் மகிழ்ச்சியான இடமாக மாற,அனைவரும் ஒன்றிணைவோம் .தினவாசல் செய்திகள் சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள். ”

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....