Friday, March 15, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே.. இந்த வார நாட்கள் உங்களுக்கு அன்பும் ஆதரவும் அதிகரிக்கக் கூடிய நாட்காளாக இருக்கின்றன. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உங்களுக்கு தேவையான பணவரவு வந்து கொண்டே இருக்கும். அலுவலக ரீதியாக சில அலைச்சல்கள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதற்கான பலன்கள் கைக்கூடி வரும். 

    விருட்சிகம்:

    விருட்சிக ராசிக்காரர்களே.. இந்த வார நாட்கள் உங்களுக்கு செலவுகள் சற்று அதிகமாக நடைபெறும் நாட்காளாக உள்ளன. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஏற்ற சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் நல்ல சூழ்நிலை இருப்பினும், வேலை அதிகமாக இருக்கும். 

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே.. இந்த வார நாட்கள் உங்களுக்கு எதிர்ப்பார்த்த பணவரவைவிட அதிகமாகவே வரும். அதனால், மன மகிழ்வுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவி இடையே சில பிரச்சனைகள் தோன்றி மறையக்கூடும். நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சற்று கூடுதல் உழைப்பு தேவை. 

    மகரம்:

    மகர ராசிக்காரர்களே.. இந்த வார நாட்களில் நீங்கள் சற்று ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களை சற்று கவனமுடன் கையாளுவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் வேலையை மட்டும் கருத்தில் கொள்வதுநன்மையை உண்டாகும். சில தேவைகள் நீங்கள் கேட்டதும் கிடைக்க வாய்ப்புண்டு. இருப்பினும் அதை நீங்கள் பெற போராட வேண்டியிருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் நினைக்கும் காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சில முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். பிள்ளைகள் மூலம் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் வார்த்தைக்கு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் வரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெண்கள் இந்த வாரத்தில் மிகவும் உற்சாகமாக செயல்படுவார்கள். 

    மீனம்:

    மீன ராசிக்காரர்களே.. இந்த வார நாட்கள் உங்களுக்கு  மன நிம்மதி ஏற்படக் கூடிய நாட்களாக அமையும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கக்கூடும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் உங்களை வந்துச் சேரும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரித்தாலும், அதை நீங்கள் முனைப்புடன் செய்ய நினைப்பீர்கள். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நலம். பொறுமையுடன் செயல்படுவது உங்களுக்கு மனநிம்மதியை தரும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....