Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகடும் குளிர்! வட மாநிலங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு

    கடும் குளிர்! வட மாநிலங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு

    கடும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு இந்திய வானிலை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வட மாநிலங்களின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் ஒரு சில வட மாநிலங்களின் மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. 

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வட மாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்ஸியஸ் ஆக பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    குறிப்பாக ராஜஸ்தானின் சுரு பகுதியில் ஒரு டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் 0.2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. 

    தலைநகர் தில்லியின் அயநகர் பகுதியில் 1.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. மேலும் பஞ்சாப் மாவட்டத்தின் அமிர்தரஸ் பகுதியில் 5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    ராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் சுமார் 20 டிகிரி செல்ஸியஸ்க்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி உள்ளன. இதன் காரணமாக எப்போதும் இருப்பதை விட குளிர் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ‘மெரினாவில் ஜல்லிக்கட்டு’ – அனுமதி கோரியுள்ள கமல்ஹாசன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....