Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்பெரம்பலூர் மாவட்டத்திலும் சுற்றிப்பார்க்க இத்தனை இடங்கள் இருக்கிறதா? 

    பெரம்பலூர் மாவட்டத்திலும் சுற்றிப்பார்க்க இத்தனை இடங்கள் இருக்கிறதா? 

    பண்டைய சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக திகழ்கிறது தற்போதைய பெரம்பலூர் மாவட்டம். 27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது தான் இந்த பெரம்பலூர் மாவட்டம். சுற்றிலும் நிலப்பரப்பை கொண்ட இந்த மாவட்டம் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை என மூன்று வட்டங்களைக் கொண்டது. 

    பெரம்பலூர் மாவட்டம் சென்னையில் இருந்து 258 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த மாவட்டத்தில் குறைந்த அளவிலே மக்கள் வசிக்கின்றனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இங்கு சில பார்ப்பதற்கு சில முக்கிய சுற்றுலா பகுதிகள் இருக்கின்றன. 

    செட்டிகுளத்தில் பாண்டியர் கால கோயில்கள்:

    செட்டிகுளத்தில் மிக முக்கியமாக ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி என இரண்டு கோயில்கள் உள்ளன. இவை பெரம்பலூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது ஆகும். ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தை பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். 

    சோழனின் வெற்றி சோழகங்கம் ஏரி:

    முதலாம் இராஜேந்திர சோழன் தனது வெற்றியை குறிக்கும் வெற்றி ‘நீர்த் தூணாக’ இந்த ஏரியை உருவாக்கி இருக்கிறார். இந்த சோழகங்கம் ஏரி ஜமமயம் என்றும் ஜெயசம்பம் என்றும் அழைக்கப்படும் இந்த ஏரி திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இந்தப் பெயர்களுடனே அழைக்கப்படுகிறது. 5 கிலோ மீட்டர் பரந்து கிடைக்கும் சோழகங்கம் ஏரி 130 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வயல்களுக்கு நீர் பாசன ஏரியாக இருந்து வருகிறது. 

    ரஞ்சன் குடி கோட்டை:

    இந்த ரஞ்சன் குடி கோட்டை பெரம்பலூரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கோட்டையை கர்நாடக நவாப்பிடம் ஜாகீர்தாரராக இருந்த ஒருவர் 17 ஆம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். சதுர வடிவிலான கற்களை வைத்து கட்டப்பட்ட இந்தக் கோட்டை, மூன்று புறங்களிலும் உள்ள சுவர்கள் வெவ்வேறு உயர் அளவுகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.

    மேலும் இந்தக் கோட்டையில் பல அகழி போன்ற உள் கட்டமைப்புகளுடன் காணப்படுகிறது. 1751 ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் மும்மது அலியும், மறுப்பக்கம் சந்தாசாகிப் மற்றும் பிரஞ்சுகாரர்களும் எதிரெதிரே நின்று நடத்திய வலிகொண்டா போரின் சாட்சியாக இந்தக் கோட்டை இன்றும் நிலைத்து நிற்கிறது. இந்தக் கோட்டையை தற்போது மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. 

    சாத்தனூர் மரப்படிவு: 

    சாத்தனூரில் சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 8 முதல் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் இருந்ததாக புவியியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதில் இருந்த கடல் வாழ் உயிரனங்கள் மற்றும் தாவரங்கள் மண்ணில் பல ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்துள்ளன. புதைப்படிவமாக இருந்தவை தற்போது மேற்பரப்பிற்கு இழுத்துவரப்பட்டு பாறைகளில் மரப்படிவுகளாக காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு பாறையில் 8 மீட்டர் நீளத்துக்கு மரப்படிவு காணப்படுகிறது. 

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப் பிரபலமான கோயில்களில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் தான் இந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மன். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் கடைசியில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மேலும் சித்திரை மாதம் முதல் நாளில் தேர்த் திருவிழாவும் நடைபெறும். 

    நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தில் கே.ஜி.எஃப் நடிகரா? – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....