Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமேசான் பணிநீக்க நடவடிக்கை; இந்தியாவில் எத்தனை பேர்?

    அமேசான் பணிநீக்க நடவடிக்கை; இந்தியாவில் எத்தனை பேர்?

    அமேசானின் பணிநீக்க அறிவிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் 1000 -க்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்படலாம்.

    அமேசான் நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. 

    இதனால், அமேசான் ஊழியர்கள் பெருமளவில் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் மேலும், 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இது குறித்து அமேசான் ஊழியர்களுக்கு அமேசான் தலைமை செயல் அதிகாரியிடம் இருந்து மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆதலால், மேலும், 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    அமேசானின் இந்த அறிவிப்பானது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமேசானின் பணிநீக்க அறிவிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் 1000 -க்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

    கடும் குளிர்! வட மாநிலங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....