Monday, April 29, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புயோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

    யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…

    இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

    இந்த 2 அரசு கல்லூரிகளிலும் இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு  (பிஎன்ஒய்எஸ்) 160 இடங்கள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.

    இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 – 23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. 

    இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியர் மூலமாக அக்டோபர் 19-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை, சென்னை -106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    இதுவரையில் இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: பொதுத் தேர்வில் முதலிடம்; முதன் முறையாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மாணவர்கள் உற்சாகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....