Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபொதுத் தேர்வில் முதலிடம்; முதன் முறையாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மாணவர்கள் உற்சாகம்!

    பொதுத் தேர்வில் முதலிடம்; முதன் முறையாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மாணவர்கள் உற்சாகம்!

    10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஹெலிகாப்டரில் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், அந்த மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த 125 மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், மாநில அரசு சார்பில் ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    மாநில மற்றும் மாவட்டங்கள் அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், 7 பேர் அமர்ந்து பயணிக்கும் ஹெலிகாப்டரில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, வானில் சுற்றிக்காட்டப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டனர். 

    இதையும் படிங்க:சென்னை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு!

    சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவின் பேரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

    மாநிலத்தில் முதல் முறையாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டது இதுவே முதல் முறை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 

    முதன் முறையாக ஹெலிகாப்டரில் பயணித்து திரும்பிய மாணவர்கள், தங்களின் வாழ்நாளில் மிகச் சிறப்பான அனுபவத்தை இன்றைய தினம் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....