Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யா-உக்ரைன் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்- கவிஞர் வைரமுத்து

    ரஷ்யா-உக்ரைன் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்- கவிஞர் வைரமுத்து

    ‘ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும்’ என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

    உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனின் பல பகுதிகள் நாசமடைந்தன. இந்தப் போரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் முக்கியமான பாலத்தில் பயங்கரமான குண்டு வெடிப்பு ஏற்பட்டது. 

    இந்த குண்டு வெடிப்பின் காரணமாக, அந்தப் பாலம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிதீவிரப்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: பொதுத் தேர்வில் முதலிடம்; முதன் முறையாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மாணவர்கள் உற்சாகம்!

    இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் 

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 

    “ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி, உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர், உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்.

    2023 ரத்தக் கசிவோடு பிறக்கும் போரை நிறுத்துங்கள்” 

    இவ்வாறு, கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....