Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு‘கன்னட தேசிய கவி குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது’: தமிழ் மொழிக்காக எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிப்பு...

    ‘கன்னட தேசிய கவி குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது’: தமிழ் மொழிக்காக எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிப்பு…

    எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    எழுத்தாளர் இமையம் யதார்த்தமாக எழுதும் முக்கிய படைப்பாளியாக கருதப்படுவர் ஆவார். இமையம் இதுவரை 11 நாவல்களும் 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். 

    குறிப்பாக சொல்லப்போனால் கோவேறு கழுதைகள், செடல், எங் கதெ, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றவை ஆகும். 

    தமிழில் அதிகம் அச்சிடப்பட்ட கதைகளில் இமையம் எழுதிய பெத்தவன் சிறுகதையும் ஒன்றாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு இமையம் அவர்களுக்கு ‘செல்லாத பயணம்’ நாவலுக்காக மிக உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது வழங்கி அரசு கௌரவித்தது. 

    இதனிடையே, மறைந்த கவிஞர் குவெம்புவின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கன்னட தேசிய கவி குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது’ தமிழ் மொழிக்காக எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விருதை வழங்கும் குழுவினர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம் என்றும் அவருடன் பெரும்பாலான எழுத்துக்கள் பெண்ணியத்திற்கான காணிக்கையாக கருதலாம் என பாராட்டியுள்ளார். 

    இந்த விருதுடன் பரிசாக வெள்ளிப்பதக்கமும் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதியா? வெளியான பரபரப்பு தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....