Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க சசிகலா கோரிக்கை

    அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க சசிகலா கோரிக்கை

    தமிழகத்தில் அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். 

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ஒரு வாரம் முன்னதாக கனமழை பெய்தது. தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள மிகப் பழமையான கட்டிடங்கள் மழை நீர் ஊறிய நிலையில் இருக்கின்றன.  

    இந்நிலையில் இன்று தமிழகத்தில் அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து சசிகலா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள அரசு பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் நரேஷ் என்ற மாணவன் கால் முறிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக வரும் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. மாணவன் நரேஷ் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். 

    அதேபோன்று சென்னை திருவல்லிக்கேணி இருசப்ப கிராம தெருவில் என்.கே.டி.அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அருகில் இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. 

    தி.மு.க. தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பராமரிக்க வேண்டிய கட்டிடங்களை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    சாயப்பட்டறை முதலாளிகளுக்காக அரசு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை பாமக ஏற்றுக்கொள்ளாது: மருத்துவர் ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....