Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்ட இறந்த பன்றிகளின் உடல்கள் - காரணம் என்ன தெரியுமா ?

    சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்ட இறந்த பன்றிகளின் உடல்கள் – காரணம் என்ன தெரியுமா ?

    மேற்கு ஆஸ்திரேலியாவில் இறந்த 70 பன்றிகளின் உடல்களை விஞ்ஞானிகள் வண்ணமயமான சூட்கேஸ்களில் அடைத்து வைத்து சென்றுள்ள நிகழ்வு தற்போது உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

    மேற்கு ஆஸ்திரேலியாவில் இயங்கி வருகிறது முர்டோக் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் காவல்துறைக்கு உதவும் நோக்கில் இறந்த பன்றிகளின் உடல்களை வைத்து புதிய ஆரய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் முயற்சியாக 70 இறந்த பன்றிகளின் உடல்களை சிதைவுறச் செய்வதற்காக கடந்த மாத இறுதியில் தனித்தனியாக சூட்கேஸ்கள் மற்றும் வீலி தொட்டிகளில் உடல்கள் அடைத்து வைக்கப்பட்டன.

    இதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான விலங்குகளின் எச்சங்களை உள்ளடக்கிய கடுமையான ஆய்வுகளும் இதே மேற்கு ஆஸ்திரேலியாவின் புதர் நிலங்களில் நடைபெற்று வருகிறது. காரணம், இதன் மூலமாக தீவிர சூழ்நிலைகளில் உடலின் சிதைவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்வதற்காகவும், கொலை சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் குற்றவியல் நிபுணர்கள் அந்த சம்பவங்களை எளிதாக மறுகட்டமைப்பு செய்து கொலையாளிகள் தப்பிக்காமல் கைது செய்ய உதவுவதற்காகவும் மட்டும்தானாம்.

    இதையும் படிங்க: 19 வருடங்களுக்கு பிறகு வியந்த ஹாரிஸ் ஜெயராஜ்…. நா.முத்துகுமார் செய்த சம்பவம் அப்படி!

    அதுமட்டுமின்றி இதுபோன்ற சோதனை ஆராய்ச்சிகள் மூலமாக சூட்கேஸின் உள்ளேயும் வெளியேயும் இறந்த விலங்குகளின் உடல்கள் எந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் மாறுகிறது என்பதை அளவிடவும் செய்கிறார்களாம். மேலும், நுண்ணுயிரியல் மாற்றங்களுடன் எலும்புகள் மற்றும் உடலின் இரசாயன மாற்றங்களும் கவனிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    உடல்கள் சூட்கேஸிற்குள் அடைக்கப்பட காரணம் என்ன என்று முர்டோக் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் மூத்த விரிவுரையாளர் பாவ்லா மாக்னி கூறியதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான இறந்த மனித உடல்கள் கொலையாளிகளால் மறைத்து வைக்கப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளை அதிகாரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாமல், அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிடுகிறது. இது போன்ற நிகழ்வுகளை தவிர்த்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவும் வகையிலேயே இது போன்ற ஆராய்ச்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

    மேலும், மனித உடல்கள் கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களின் உடல்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வதற்கு முடிந்த வரை கொலையாளிகள் சூட்கேஸ்கள், வீலி பின்கள் (குப்பை தொட்டி), கார் பூட்ஸ், ஃப்ரிட்ஜ்கள் போன்ற இறுக்கமான பொருட்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். காரணம், கொலைகாரர்கள் கொலையுண்ட மனிதரின் உடலை மறைத்து தங்கள் தடயங்களை மறைக்கவே இதுபோன்ற முறைகளை கையாள்வார்கள். இதிலிருந்து மாற்று வழிகளை யோசிக்கவே இதுபோன்ற ஆராய்ச்சிகளை செய்துவருவதாக அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு பெர்த் அருகே உள்ள அணையில் சக்கர குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு மனிதரின் உடலும், சில வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் இரண்டு சூட்கேஸ்களில் இரண்டு குழந்தைகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை ஆராய்ச்சி மிகவும் தேவை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள்  உணர்த்துகின்றன.

    சூட்கேஸ்கள் போன்ற இறுக்கமான மூடப்பட்ட பொருட்களுக்குள் இறந்த உடல்களை வைக்கும் போது உடல் சிதைவடையும் நிகழ்வு பாதிக்கிறது. இதனால் தடயவியல் மற்றும் நோயியல் நிபுணர், தடயவியல் பூச்சியியல் வல்லுநர்களும் இறந்த உடல்களில், அவர்கள் மரணித்த நேரத்தை அளவீடு செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கவே இந்த மாதிரியான ஆராய்ச்சிகளை கையில் எடுத்திருப்பதாக அவர் பேசி முடித்தார். அழுகும் உடல்கள் பற்றி மேற்கொண்டுள்ள இந்த ஆராய்ச்சி உலகிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....