Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்87 வயதில் முதல் நிலவுப் பயணம்: சாதனைக்கு வயது ஒரு தடையல்ல..!

    87 வயதில் முதல் நிலவுப் பயணம்: சாதனைக்கு வயது ஒரு தடையல்ல..!

    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன்முறையாக பயணித்த டென்னிஸ் டிட்டோ நிலவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார். 

    விண்வெளி சுற்றுலாவின் ஒரு பகுதியாக கடந்த 2001 ஆம் ஆண்டு டிட்டோ என்பவர் முதல் முறையாக விண்வெளி சுற்றுலா பயணம் மேற்கொண்டார். 

    இதனைத்தொடர்ந்து, 21 ஆண்டுகள் கழித்து மற்றொரு மிகவும் துணிச்சலான சாகசத்தில் ஈடுபட தற்போது, அவர் முடிவு செய்துள்ளார். 82 வயதுடைய டிட்டோ கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பைஸ் எஸ்க்ஸ் (Space X) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். 

    இதையும் படிங்க:அதிகளவில் வெளிவந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு…

    இந்த ஒப்பந்தத்தின் படி, 5 ஆண்டுக்குள் நிலவுக்கு செல்லும் பயணம் தான் அது. டென்னிஸ் டிட்டோவுடன் அவரது மனைவி அகிகோ உட்பட மொத்தம் 10 பேர் நிலவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

    இருப்பினும், அப்போது டிட்டோவுக்கு 87 வயது நிறைந்திருக்கும். இந்த முதல் நிலவு பயணதிக்ரு முன்பு, ஸ்டார்ஷிப் விண்கலம் தடையின்றி, பயணம் செய்வதற்கான பல பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. 

    இது தொடர்பாக டிட்டோ, “பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையுடன், முதியவர் என்ற சாதனையையும் படைத்தவர் ஜான் கிளென். அவருக்கு வயது 77. அவரை விட நான் 10 வயது மூத்தவன்” என தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....