Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"காலம் போனதே தெரியவில்லை..பேரன்புக்கு நன்றி" - பகாசூரன் குறித்து செல்வராகவன் பதிவு!

    “காலம் போனதே தெரியவில்லை..பேரன்புக்கு நன்றி” – பகாசூரன் குறித்து செல்வராகவன் பதிவு!

    பகாசூரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். 

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் வரவேற்பை பெற்றது.

    இதையும் படிங்க:தவறாக சித்தரிக்கப்படும் பாஜக தலைவர்களின் படங்கள்? யார் இந்த லோன் ஆப் நிறுவனம்…?

    இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படத்தில் இருந்து ‘ சிவ சிவாயம்’ எனும் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படத்திலிருந்து அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டது. இச்செய்தியை இப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி அறிவித்துள்ளார். 

    மேலும், ‘பகாசூரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்தது.. இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.. மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை.. இனிமையான, எளிமையான மாமனிதர் இவர்.. நன்றி செல்வராகவன் சார்’ என தெரிவித்துள்ளார். 

    இயக்குநரின் இந்த பதிவுக்கு, ‘மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை ! பேரன்புக்கு நன்றி’ என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார். ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழு காணொலி வாயிலாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....