Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமுதலாம் உலகப்போர் 104-ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி...

    முதலாம் உலகப்போர் 104-ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி…

    முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர்வீரர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முதலாம் உலகப்போர் முடிந்ததன் 104-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர்வீரர் நினைவு சின்னத்தில் போரின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துப்பட்டது.

    போர்வீரர் நினவு சின்னத்தில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு கவுன்சில் ஜெனரல் லிசே டால்போட், புதுச்சேரி அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரார்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? லவ்டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....