Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக பிரசித்தி பெற்ற 'குலசை தசரா திருவிழா' கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    உலக பிரசித்தி பெற்ற ‘குலசை தசரா திருவிழா’ கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    உலக புகழ்ப்பெற்ற குலசை தசரா திருவிழா கொடியற்றதுடன் நேற்று தொடங்கியது. 

    இந்திய நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக தூக்குக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினத்தில் தான் தசரா திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக புகழ்ப்பெற்றது. 

    இந்நிலையில், இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று (செப்டம்பர் 26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழாவினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோயிலுக்கு சென்று முத்தாரம்மனை தரிசித்தனர். மேலும், பல நாள்கள் விரதமிருந்த பக்தர்கள் நேற்று காப்பு கட்டிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, பக்தர்கள் பலரும் தங்களது நேர்த்தி கடன்களைச் செலுத்தினர்.

    குறிப்பாக, முத்தாரம்மனின் அவதாரங்களை வேடங்களாக தரித்து காணிக்கை வசூலித்து கோயிலில் செலுத்தினர்.

    கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....